» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் : அஜித்குமார் வழக்கில் நேரடி சாட்சி கோரிக்கை!
வியாழன் 3, ஜூலை 2025 5:43:28 PM (IST)
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
கோயில் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீசார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர் ஒருவர், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் நேரடி சாட்சியாக உள்ளார். வீடியோ எடுத்தவர் இன்று (வியாழக்கிழமை) தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு இமெயிலில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: போலீசார் தாக்கி அஜித்குமார் மரணமடைந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி சாட்சி அளித்துள்ளேன். அஜித்குமார் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ராஜா என்பவர் பல்வேறு குற்றப் பிண்ணனி உடைய ரவுடிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஜூன் 28-ம் தேதி காலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் நான் காவலர் ராஜாவை நேரில் சந்தித்தேன். அப்போதே என்னை கடுமையாக மிரட்டி வந்தார். இதனால் எனக்கும், என்னை சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக உள்ள எனக்கும், மற்றவர்களுக்கும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கடித நகலை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு பதிவாளருக்கும், தென்மண்டல ஐஜிக்கும் அனுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்.பி., ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 7:57:02 AM (IST)

திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)
