» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் இருந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார்.
வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில் 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.
ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும் அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்துள்ளது.
இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக்கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)
