» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டின் ஹோர்மொச்கன் மாகாணத்தில் கிஷ் தீவுகள் உள்ளன. மீன் பிடி தொழிலுக்கு பெயர் போன இந்த தீவில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்ட நிலையில் இவர்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்பொழுது போர் முடிந்த போதிலும் கிஷ் தீவில் உள்ள மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் உள்ளனர். அங்குள்ள சூழல் இன்னமும் பதட்டமான நிலையில் இருப்பதால் மீனவர்கள் அவர்களது படகுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தொடர்பு கொண்டு நிலையை எடுத்து கூறினார். அவர்களது குடும்பத்தினர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களை தொடர்பு கொண்டு இந்த மீனவர்களை மீட்டு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று இன்று புது டில்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷ் அவர்களை சந்தித்த விஜய் வசந்த், மீனவர்களின் நிலைமையை எடுத்து கூறி, அரசு இவர்களை விரைந்து மீட்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் தவிக்கும் மீனவர்களுக்கு அனைத்து வகை உதவிகளையும் அரசு உடனே செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)
