» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!

வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். 

திருநின்றவூர் பெரிய காலையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் திருநின்றவூர் விசிக நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி 26வது வார்டு கவுன்சியராகவும், திருவள்ளூர் நகராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். கோமதி ஸ்டீபன் ராஜ் தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேறு நபருடன் பழகி வந்த கோமதியை கணவர் ஸ்டீபன்ராஜ் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயராம் நகர் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கோமதியுடன் ஸ்டீபன்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கோமதியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன் ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory