» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ம.தி.மு.க.வுக்கும், வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார் : மல்லை சத்யா
வியாழன் 17, ஜூலை 2025 12:50:38 PM (IST)

ம.தி.மு.க.வுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார் என்று துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும். அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.
துரை வைகோ அரசியல் பால பாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்.கே.ஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.
எனவே, ம.தி.மு.க.வை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத் தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, ம.தி.மு.க.வுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆருயிர் அண்ணன் மு.க. முத்து மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
சனி 19, ஜூலை 2025 12:48:22 PM (IST)

கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!!
சனி 19, ஜூலை 2025 12:08:33 PM (IST)

வாகனம் பறிக்கப்பட்ட விவகாரம்: டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் - டிஐஜி பரிந்துரை!
சனி 19, ஜூலை 2025 12:02:24 PM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய தலைமை காவலர் கைது!
சனி 19, ஜூலை 2025 10:37:04 AM (IST)

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்
சனி 19, ஜூலை 2025 10:32:48 AM (IST)

SOORYANJul 17, 2025 - 03:40:49 PM | Posted IP 162.1*****