» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)

மார்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சேர்ந்தவர் ஆன்டணி அருள்தாஸ். இவரது வீட்டின் பின்பகுதியில் சமையலறையையொட்டி விறகுகள் வைக்கப்பட்டிருந்ததாம். அப்பகுதியில் மரநாய் 5 குட்டிகளுடன் இருந்ததை கண்டுள்ளார். 

இதையடுத்து, அவர் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் வந்து, மரநாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். தொடர்ந்து அவற்றை களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory