» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)



குமரி மாவட்ட வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் கிருஷ்ணன்கோவில், பறக்கை, புத்தளம், தேரூர், செண்பகராமன்புதூர், தாழக்குடி, திட்டுவிளை, சிறமடம், கடுக்கரை, திங்கள்நகர் ஆகிய 10 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தேரூர் மற்றும் அதை சார்ந்துள்ள பகுதிகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தேரூர் நேரடி முதல் நிலையம் 01.09.2025 முதல் தொடக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான சாதாரண ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 மற்றும் சன்ன ரகங்களுக்கு ரூ.2545 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

 நெல் கொள்முதல் விலையில் அதிக லாபம் பெறுவதற்கு விவசாயிகள் தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

ஆய்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) ஜென்கின் பிரபாகர், உதவி இயக்குனர் (அகஸ்தீஸ்வரம்) சுனில் தத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கலைமதி, துணை மண்டல மேலாளர்கள், வேளாண்மை துறை களப்பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory