» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்சார கணக்கெடுப்பு எப்போது?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:43:42 PM (IST)

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்சார கணக்கெடுப்பு முறை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்த அரசு முயற்சி எடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் "ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே அதற்கான டெண்டர் போய் உள்ளோம். டெண்டர் முடிவுற்று ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.


மக்கள் கருத்து

KANNANSep 2, 2025 - 07:04:34 PM | Posted IP 172.7*****

PAAVAM.. ANJU VARUSHAMNTRADHU PATHALAYE.... ENNASEIVADHU.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory