» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனராக தமிழகத்தினை சேர்ந்த டாக்டர் அறவாழி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் இவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவர் 2004ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் போது பணிபுரிந்தவர். இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்த போது ஆதிச்சநல்லூரில் அப்போது தமிழரான டாக்டர் அருண்ராஜ் என்பவர் பணிபுரிந்தார். அதன் பின் வந்த இயக்குனர்களில் பலர் வடநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

இந்நிலையில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் பரமரிப்பு இன்றியும், அமைய இருந்த சி சைட் மியூசியம் தடைபட்டும் கிடந்தது. அதோடு மட்டுமல்லாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் கடந்த 5.08.2023ல் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் தடைப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் டாக்டர் அறவாழி திருச்சி மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆர்வலரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory