» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு

புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? என்று குமரி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள, சுமார் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட, அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாகும். புவியியல் ரீதியாக, இது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து அதிக தொலைவில் உள்ளதால், மக்கள் தலைநகருக்கு செல்ல அதிக நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயணத்திற்கு முதன்மையாக ரயில்களை நம்பியுள்ளனர்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு தற்போது இரண்டு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன: இந்த ரயில்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்குப் பிறகு நாகர்கோவிலிருந்து சென்னைக்கு எந்தவொரு புதிய தினசரி ரயிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. மேலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டதால், இதன் முன்பதிவு இருக்கைகள் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு போதுமான அளவில் கிடைப்பதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக லாப நோக்கில் தினசரி சுமார் 100 ஆம்னி பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால், ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காததால், பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்பவர்கள், அதிக கட்டணம் செலுத்தி, பாதுகாப்பற்ற முறையில் தனியார் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தென்னிந்தியாவில், ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக, ஆன்மீக பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக கன்னியாகுமரி உள்ளது. 1979 ஏப்ரல் 15 முதல் கன்னியாகுமரியில் அகலப்பாதை ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 1994இல், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவையாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆரம்பத்தில், சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜாக இருந்ததால், இந்த ரயில் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர், சென்னை எழும்பூர்-திருச்சி மார்க்கம் அகலப் பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ரயில் எழும்பூருக்கு மாற்றப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் அதிகாலை சூர்ய உதயத்துக்கு முன்பு வந்து விட்டு சூர்ய மறைவை பார்த்து விட்டு செல்லும் மாறு காலஅட்டவணை அமைத்து சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரயில் சேவை இயக்க வேண்டும். 

இவ்வாறு இயக்கும் போது மாவட்டதத்pல் உள்ள மற்ற பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்வதை குறைத்து அன்மீக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்வார்கள.; இவ்வாறு இயக்கும் போது அந்த ரயில் முழக்க முழக்க சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் பயணிக்கும் ரயிலாக இருக்கும்.

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி புதிய சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து வட இந்திய நகரங்களுக்கு செல்லும் ரயில்களுடன் இணைப்பு ரயிலாக செயல்படும், இதனால் பயணிகள் தாம்பரம் , எழும்பூரிலிருந்து சென்ட்ரலுக்கு மாற வேண்டிய அவசியம் இருக்காது.

2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நாகர்கோவில்-தாம்பரம் ரயில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இருவழிப்பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில்வே துறை இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

அனநத்புரி ரயிலை கொல்லம் வரை நீட்டிப்பு செய்த பிறகு கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகள் அதாவது இரணியல், குழித்துறை, பாறசாலை ஆகிய ரயில் நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள் நலன் கருதி நாகர்கோவில் - தாம்பரம் ரயிலை திருவனந்தபுரம் தெற்கு (நேமம் ) வரை நீட்டிக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித்தினர் இந்த பகுதியில்தான் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை முதல் மாலை வரை இந்த ரயிலின் பெட்டிகள் தற்போது இயங்கும் வாரத்திற்கு மூன்று நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரயிலை எளிதாக திருவனந்தபுரம் தெற்கு (நேமம்) வரை நீட்டித்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்கள் ரயில்களுக்கு சூட்டி இயக்கி வருகிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்கள் எந்த ரயிலுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம், சேர நாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு, நாஞ்சில் நாடு, இடை நாடு என அழைக்கப்பட்டது. எனவே, புதிய ரயிலுக்கு இடைநாடு எக்ஸ்பிரஸ் அல்லது ஆய்நாடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டி இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, சென்னைக்கு கூடுதல் தினசரி இரவு நேர ரயில் இயக்குவது மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவது ஆகியவற்றை ரயில்வே துறை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இது, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பயண சிரமங்களை குறைப்பதோடு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் என்று பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory