» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பு பிரிவு மற்றும் நிர்வாக குழு சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (17.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்- 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி, இன்று துவக்கிப்பட்டுள்ளது.
இப்பேரணியில் நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள், சுய மருத்துவத்தினால் வரும் பாதிப்புகள், ஆயுர்வேத மருந்துகள் இயற்கையானவை எனவே மருத்துவரின் ஆலோசனை தேவையில்லை என்று பொதுமக்களிடையே நிலவி வரும் தவறான நம்பிக்கை தவறாக வழிகாட்டும் மருத்துவம் சார்ந்த போலியான விளம்பரங்களுக்கு விழிப்பாக இருங்கள். மருந்துகளை மருத்துவர் ஆலோசனை படி உட்கொண்டு எதிர்மறை விளைவுகளை தவிர்ப்போம் முதலிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி வேப்பமூடு சந்திப்பு வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை வந்து அடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
பேரணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.சுகிதா (பொது), கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெ.கிளாரன்ஸ் டேவி, கல்லூரி இணை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டோமின், மருத்துவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)
