» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பிரதான சாலை அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் மணிமண்டபத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (17.09.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் குழந்தை பாடல்கள் எழுதியவர்.
அன்னாருடைய இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு முழுதிருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், மாணவ மாணவியர்கள், போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவுசார்ந்த நூலகத்துடன் கூடிய மண்டபம் அமைக்க ரூ.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு, வேகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து கவிமணி சிலையினை விரைந்து கொண்டு வந்து நிறுவி பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது வண்ணம்பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மணிமண்டபத்தினை அழகுப்படுத்துவம் விதமாக முகப்பில் நுழைவு வாயில் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, இப்பணிகள் அனைத்தும் வெகுவிரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள சர்.சி.பி இராமசாமி பூங்காவில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடனடியான பணிகளை துவக்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் செயற்பொறியாளர் ஜோசப் ரென்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தோவாளை முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தாணு, ஒப்பந்ததாரர் ஜாண்சன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)
