» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

வெள்ளி 24, அக்டோபர் 2025 7:53:06 AM (IST)



கந்தசஷ்டி தகடுகளை விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று யாகசாலையில் வெள்ளி, செம்பு தகடுகள் (யந்திரங்கள்) வைக்கப்பட்டு பூஜைகளுக்குப் பின்னர், ஆறாம் நாள் சூரசம்ஹார நாளன்று யாகசாலையிலிருந்து எடுக்கப்பட்டு கோயில் அலுவலகம் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சஷ்டி யாகசாலை தகடுகள் (யந்திரம்) விற்பனை செய்யப்படுவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்குடன் சிலர் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் விடியோக்கள் வெளியிட்டு பகிர்ந்து வருவது கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது. கோயில் நிர்வாகத்தால் எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ கந்தசஷ்டி தகடுகளை விற்பனை செய்யவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. 

எனவே, பக்தர்கள் சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வரும் தவறான விளம்பரங்கள் அல்லது இணைப்புகள் மூலம் பணம் செலுத்த வேண்டாம். இத்தகைய தவறான தளங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். கோயில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory