» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வீதி உலா!

வெள்ளி 24, அக்டோபர் 2025 8:10:40 AM (IST)



திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் 2-ம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர்-அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளி வீதி உலா சென்றனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீனத்தின் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவில் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

6-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory