» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகை!
திங்கள் 27, அக்டோபர் 2025 5:48:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. மேற்கு நகர அலுவலக புதிய கட்டிடம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க. புதிய அலுவலகம் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல முழுஉருவச் சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் கலைஞர் அறிவகம் என்ற பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகிறார். பின்னர் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் அமைந்துள்ள கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க அலுவலகத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையையும் திறந்து வைக்கிறார். இதையடுத்து அவர் நூலகத்தை பார்வையிடுகிறார்.
இதனால் உற்சாகமடைந்துள்ள தி.மு.க. தொண்டர்கள் கோவில்பட்டி பகுதியில் முதல்-அமைச்சரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் இருந்து சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடிகளும், நுழைவு வாயில்களும் டிஜிட்டல் பேனர்களும், மின்விளக்குடன் கூடிய நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
கோவில்பட்டியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவில்பட்டி, தென்காசி நகர பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் : நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:59:19 AM (IST)

போக்ஸோ வழக்குகளில் .103.62 கோடி நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:55:05 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:14:14 AM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 9:34:16 PM (IST)




