» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)
திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.
விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ரயில்வேத்துறை ஆண்டுதோறும் ரயில்களின் கால அட்டவணையை மாற்றி அமல்படுத்தி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான அட்டவணை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு கால அட்டவணை தயார் செய்யும் போது நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணிகள் ரயில் மற்றும் நெல்லை-நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து நெல்லை-நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை ஒரே பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும். இல்லை எனில் திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். புதிய சர்குலர் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
தற்போது காலை நேரத்தில் கொல்லம்-கன்னியாகுமரி மற்றும் புனலூர்-கன்னியாகுமரி ஆகிய 2 பயணிகள் ரயில்கள் கன்னியாகுமரி செல்கின்றன. ஆனால் நாகர்கோவில்-நெல்லை வழித்தடத்தில் பகலில் இடைப்பட்ட நேரத்தில் பயணிகள் ரயில் இல்லை. எனவே இவற்றில் ஏதாவது ஒன்றை நாகர்கோவில் டவுன் வழியாக நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
அந்தியோதயா ரயில்
கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரயிலின் ஓய்வு நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை என மாற்ற வேண்டும். நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றி அமைக்கலாம். தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயில் புறப்படும் நேரத்தை இரவு 10 மணி என மாற்றி நாகர்கோவிலுக்கு காலை 10 மணிக்குள் வருமாறு பரிந்துரைக்கிறோம்.
கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை நாகர்கோவிலில் இரவு 8.30 மணி என மாற்ற வேண்டும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கன்னியாகுமரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்குள் திரும்பி வருமாறு நேரத்தை மாற்ற வேண்டும்.
திருச்சி இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியலில் தற்காலிக நிறுத்தம் வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் ரயில்களை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் நெரிசல் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் : நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:59:19 AM (IST)

போக்ஸோ வழக்குகளில் .103.62 கோடி நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:55:05 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:14:14 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 9:34:16 PM (IST)

கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகை!
திங்கள் 27, அக்டோபர் 2025 5:48:35 PM (IST)




