» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவில் இருந்த தேவையற்ற களைகள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன. ஓ. பன்னீர்செல்வம் சென்ற இடம் 'ஆமை புகுந்த வீடு' போல மாறிவிடும். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுக இனி செழித்து வளரும். அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது. எங்களது கட்சியிலிருந்து சென்ற 'செல்லாக்காசுகளை' தான் தற்போது திமுக சேர்த்து வருகிறது.தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களையும் சுரண்டி, ஒரே ஒரு குடும்பம் மட்டும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடும் இந்தக் குடும்ப ஆட்சியை வீழ்த்த வேண்டும். திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய ஆட்சி தொடரக்கூடாது. திமுகவிற்குள் எப்போதும் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

தமிழக அரசு அச்சுத்துறையில் வேலை: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 5:49:45 PM (IST)

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 4:56:43 PM (IST)

தமிழக அரசைக் கண்டித்து மார்ச் 12-ல் ஆர்ப்பாட்டம் : தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 4:51:47 PM (IST)

