» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)



பசுவந்தனை அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கிலோ எடையுள்ள பட்டாசு தயாரிப்பு வெடிமருந்து பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம்  பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வெடிமருந்து விற்பனை மற்றும் பட்டாசு தயாரிப்பு நடப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று (07.03.2026) லக்கமாள் தேவி பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்கப்பட்டிருந்த ஒரு கொட்டகையை போலீசார் சோதனையிட்டனர். அங்குச் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள் மற்றும் 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பிகள் என மொத்தம் 800 கிலோ பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெடிபொருட்களைப் பதுக்கிய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில்: "தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதோ அல்லது வெடிமருந்துகளைப் பதுக்கி வைப்பதோ சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முறையான அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்"
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory