» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தாமதம் மே 8-ல் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகுமா?

புதன் 6, மே 2026 10:38:37 AM (IST)

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ளதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8,27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

தற்போது மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மற்றும் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் தேர்வுத்துறை வெற்றிகரமாக முடித்துள்ளது. முதலில் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: "தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற வேண்டும். தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரே, அவர்களின் ஒப்புதலோடு முடிவுகள் வெளியாகும். எனவே, மே 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அடுத்த சில நாட்களில் புதிய அரசு பதவியேற்றதும், உரிய அனுமதி பெற்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான (TNEA) இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தள்ளிப்போவதால், உயர்கல்வி சேர்க்கைக்கான அடுத்தகட்டப் பணிகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory