» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
புதன் 13, மே 2026 12:20:56 PM (IST)

அரசியலில் மாற்றம் என்று கூறிவிட்டு 'புஷ்பா' பட பாணியில் சோபா ஆட்சியை விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தவெக-வின் வெற்றி குறித்துப் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சி அமையப் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை. 65 சதவீத மக்கள் உங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தான் நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவே அவர்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்" எனச் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட பாணியைக் குறிப்பிட்ட உதயநிதி, "முதலமைச்சர் எங்குச் சென்றாலும் அவருடன் ஒரு பிரத்யேக சோபா செல்கிறது. 'புஷ்பா' பட பாணியில் சோபா ஆட்சியை விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார். அரசியலில் மாற்றம் என்று கூறிவிட்டு வந்த நீங்கள், தற்போது 'பரிமாற்றம்' (குதிரை பேரம்) மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரசாரத்தின்போது 'ஊழல் சக்தி' என்று யாரை விமர்சித்தீர்களோ, அவர்களுடனேயே (அதிமுக அதிருப்தி குழு) தற்போது கைகோர்த்துள்ளீர்கள். இது என்ன மாதிரியான அரசியல்? மேலும், 'மற்றும் சிலர்' எனக் கிண்டல் செய்த கட்சிகளின் ஆதரவில்தான் இன்று உங்கள் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது எனச் சாடினார்.
"முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் போன்ற திட்டங்களுக்கான நிதி இன்னும் பயனர்களுக்குச் சென்று சேரவில்லை. அதை உடனடியாக வரவு வைக்க வேண்டும். நீங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றுவீர்கள் என மக்கள் நம்புகிறார்கள்" என்றும் அவர் பேசினார்.
இந்தக் காரசாரமான உரையைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்களுக்குச் சரிவு: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்கு!
வெள்ளி 15, மே 2026 11:21:36 AM (IST)

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை : பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
வெள்ளி 15, மே 2026 10:31:44 AM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)


