» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு - முதல்வர் விஜய் உத்தரவு!
வியாழன் 14, மே 2026 3:30:06 PM (IST)
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி: தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு காரணமாக, தமிழக அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசுப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
"மக்களுக்கான நலத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, கனிவுடன் பரிசீலித்து இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குகிறது" எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)


