» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ஜோதிடர் நியமன அரசாணையை வாபஸ் வாங்கியது தமிழக அரசு!
புதன் 13, மே 2026 3:20:27 PM (IST)
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் நிர்வாக ரீதியான நடவடிக்கையாகத் தனது நம்பிக்கைக்குரிய ஆலோசகர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தார். ஆனால், ஒரு ஜோதிடரை அரசுப் பதவிக்கு நியமிப்பது 'பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது' என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நியமனத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். "அரசு நிர்வாகத்தில் ஜோதிடர்களின் தலையீடு இருப்பதை ஏற்க முடியாது" என அவர் வலியுறுத்தினார். அதேபோல், சமூக வலைதளங்களிலும் தவெக அரசின் இந்த முடிவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கூட்டணிக் கட்சிகளிடையே விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்மறையான கருத்துகளைக் கட்டுப்படுத்தவும், ரத்தன் பண்டிட் நியமனத்தைத் திரும்பப் பெற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த நியமனத்திற்கான அரசாணையைத் தமிழக அரசு முறைப்படி ரத்து செய்துள்ளது.
பதவியேற்ற சில நாட்களிலேயே தனது ஒரு முக்கிய முடிவை வாபஸ் வாங்கியிருப்பது, முதலமைச்சர் விஜய் ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களுக்குச் செவிசாய்க்கிறார் என்பதைக் காட்டுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தீர ஆலோசிக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 13, மே 2026 3:44:08 PM (IST)


