» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் மிக முக்கியமான சுற்றுலாதளம் ஆகும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை புரிக்கின்றனர். பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, குளியறை வசதி, நிழற்குடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சுற்றுலாத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று சிற்றார் அணை-II பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அணை பகுதி மேம்பாட்டு சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படகு சவாரி அமைவிடம், படகுதளம், உணவுக்கூடம், குடில் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திற்பரப்பு அருவி பகுதியில் அருவி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடம், பெண்கள் உடைமாற்றும் அறை, நடைபாதை, கழிப்பறைகள், பூங்கா மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு பணிகளின் தன்மை குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தரமானதாக விரைந்து முடித்திடவும் செயல்அலுவலர்கள், ஒப்பந்ததரார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் சூழலியல் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்புகள் வழங்கிடவும், குளிக்கும் இடத்தில் படித்துறை அமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, மாவட்ட சுற்றுலா அலுவலர், திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உள்ளிட்டவர்கள் இணைந்து கண்காணித்து திட்டப்பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் .ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் .வசந்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார் (வ.ஊ), சசி (கி.ஊ), திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர், உதவி பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மகளிருக்கு மே மாத உரிமைத் தொகை ரூ.1,000 வரவு - தவெக அரசு நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 4:16:49 PM (IST)

அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம்! - தமிழக அரசு அதிரடி உத்தரவு
வெள்ளி 15, மே 2026 3:17:28 PM (IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்களுக்குச் சரிவு: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்கு!
வெள்ளி 15, மே 2026 11:21:36 AM (IST)

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை : பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
வெள்ளி 15, மே 2026 10:31:44 AM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)


