» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணை தவெக நிர்வாகிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்: ”தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளி வந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர்.

இந்த லட்சணத்தில், முதல்வர் விஜய் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்! அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்!” என்று நயினார் கூறியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்: "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி ஜெயபால் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory