» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

மார்த்தாண்டத்தில் சாலையில் கிடந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சூரிய பிரசாத், சாலையில் நடந்து சென்றபோது அங்குப் பெருமளவிலான பணப் பை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். அதை எடுத்துத் திறந்து பார்த்தபோது அதில் 60 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
உடனடியாக அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற மாணவன், சம்பவம் குறித்துத் தனது தாய் அம்பிளியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரோ, "அடுத்தவர் உழைப்பில் வந்த பணம் நமக்குத் தேவை இல்லை, அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தாயின் அறிவுரையை ஏற்ற மாணவன் சூரிய பிரசாத், உடனடியாக நகராட்சி கவுன்சிலர் விஜுவுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்குச் சப் இன்ஸ்பெக்டர் இந்திரசுடனை நேரில் சந்தித்து, சாலையில் கண்டெடுத்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அப்படியே பத்திரமாக ஒப்படைத்தார்.
ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலும் மாணவன் மற்றும் அவரது தாயின் இந்த நேர்மையான குணத்தைப் பாராட்டிய சப் இன்ஸ்பெக்டர் இந்திரசுடன், மாணவன் சூரிய பிரசாத்திற்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நேர்மைச் செயல் குறித்த தகவல் பரவியதை அடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடையேயும் அந்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, அந்தப் பணத்தைத் தவறவிட்ட நபர் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)

மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
திங்கள் 15, ஜூன் 2026 5:06:31 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: அதிமுக வழக்கு!
திங்கள் 15, ஜூன் 2026 4:39:25 PM (IST)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:31:21 PM (IST)

இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு..!
திங்கள் 15, ஜூன் 2026 3:14:03 PM (IST)


