» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சித் தலைமை அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 5:19:48 PM (IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் தோல்வியைத் தழுவினார். இத்தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் செயல்பாடு குறித்து டெல்லி தலைமை அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்கு ஆதரவு அளித்ததுடன் அமைச்சரவையிலும் இடம்பெற்றது. முன்னதாக, தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு தரப்பு நிலைப்பாடுகள் நிலவின.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் தொடர்வதையே விரும்பியதாகவும், ஆனால் டெல்லி தலைமை அதற்கு நேர் எதிரான அரசியல் முடிவை எடுத்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது குறித்து விமர்சனம் செய்து வந்த திமுக தரப்பிற்கு, மாணிக்கம் தாகூர் தொடர்ந்து அரசியல் ரீதியாகக் கருத்துக்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
சனி 27, ஜூன் 2026 4:34:36 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு - வாலிபர் கைது!
சனி 27, ஜூன் 2026 4:07:34 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் மீது நடவடிக்கை : நயினார் நாகேந்திரன் கோரிக்கை!
சனி 27, ஜூன் 2026 3:54:12 PM (IST)

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்
சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)

அமைச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் - கீதாஜீவன் பரபரப்பு பேட்டி
சனி 27, ஜூன் 2026 12:18:08 PM (IST)


