» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)
ஆசிரியர்கள் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 11-ஆம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கீரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் தாமஸ் - லென்சி தம்பதி. இவர்களது மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த கவின் ஜெனில் திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கூச்சலிட்ட பாட்டியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவனின் தாய் லென்சி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில்: வகுப்பில் படித்த மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காகப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகனைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சல் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவன் உயிரிழந்த செய்தியையறிந்த சக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் சாவுக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்களும் வீதியில் இறங்கிப் போராடினர்.
காவல்துறையினரின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)



என்னAug 23, 2026 - 04:56:15 PM | Posted IP 172.7*****