» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பினார்.
கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரித்து அனுப்ப உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தலைமைச் செயலாளர் சாய் குமார் நடத்திய கூட்டத்திற்குப் பிறகே, கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபடும் இடதுசாரி மாணவர்களைக் கண்காணிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சாய் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதன் முக்கியக் கருத்துகள்: "மாணவர் அமைப்புகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமை எங்களுக்கு உள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சியையோ அமைப்பையோ கண்காணிக்கச் சொல்லும் உரிமை அதிகாரிகளுக்கு இல்லை."
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு உள்ளதா என்பதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இடதுசாரிகளின் ஆதரவோடுதான் இந்த அரசு நீடிக்கிறது. அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?" என அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)


