» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)
மானாமதுரை அருகே காதல் விவகாரம் காரணமாகச் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (35). இவர் மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். சிவபாலன் தனது உறவினரான முருகேசன் (50) என்பவரின் மகளைக் காதலித்து வந்தார். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்ணின் தம்பி அருண்ராஜா (19) இவர்களது காதலைத் தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன், பெண்ணின் தம்பியைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. சிவபாலன் வருவதையறிந்த பெண்ணின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சிவபாலனை வழியனுப்பி கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாகப் பெண்ணின் தந்தை முருகேசன் மற்றும் தம்பி அருண்ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)


