» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இது என்ன பொதுக்கூட்டமா? சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சால் சபாநாயகர் ஆவேசம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:35:13 PM (IST)

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்தது தொடர்பான விவாதத்தின் போது, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கும் பேரவைத் தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்துள்ளனர். இது குறித்து இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி: "6 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளதால், அங்குள்ள மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் முடங்கியுள்ளன. ஒரு தொகுதியின் முழுப் பிரச்சனைகளையும் பொறுப்பு அமைச்சரால் மட்டுமே அறிந்து கொள்ள முடியாது; அதற்குச் சட்டப்பேரவை உறுப்பினர் அவசியம்" என்று வாதிட்டார்.
செங்கோட்டையன் பதில்: "விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆர்வம். மீண்டும் நடைபெறும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்" எனக் குறிப்பிட்டார்.
விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துகள் வழக்கில் நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார். அதே நேரத்தில் இபிஎஸ் பேசிய மைக் அணைக்கப்பட்டதால் அவையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தொடர்ந்து, "ஒரு கட்சியில் வெற்றி பெற்றுவிட்டு ராஜிநாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்?" என இபிஎஸ் சத்தமாகப் பேசத் தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமி அவை மரபை மீறி உரக்கப் பேசியதால் கோபமடைந்த பேரவைத் தலைவர், "இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்? முன்னாள் முதல்வர் இபிஎஸ் உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக் கூடாது என்பதால் தான் சொல்கிறேன்" என ஆவேசமாக அறிவுறுத்தினார். இச்சம்பவத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:02:57 PM (IST)

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 7:52:27 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)


