» சினிமா » செய்திகள்
பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)

பாலாவின் "வணங்கான்" பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.கிணற்றுக்குள் இருந்து சகதியுடன் வெளியே வரும் அருண் விஜய், ஒரு கையில் பிள்ளையாரையும் மறு கையில் பெரியாரையும் தூக்கி வைத்திருக்கிறார். இந்தத் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளப் பதிவில், "இயக்குநர் பாலாவின் இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதே போல ‘வணங்கான்’ படத்தில், பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)
