» சினிமா » செய்திகள்
ஊட்டியில் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா காயம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:56:01 AM (IST)
ஊட்டியில் சண்டை காட்சியில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வருகிறதுஊட்டியில் உள்ள "நவாநகர் பேலஸ்" என்ற இடத்தில் சண்டை காட்சிகள் படக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் "ஜூனியர் பைட்டர்ஸ்" உடன் சண்டை காட்சி நடந்த போது, நடிகர் சூர்யாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். லேசான காயம் என்பதால் சிறிது ஓய்வுக்கு பின்பு அவர் மீண்டும் படபிடிப்பில் கலந்து கொண்டார். இந்தநிலையில் நடிகர் சூர்யாவின் மகனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நடிகர் சூர்யா அவரது பிறந்த நாளை கொண்டாட ஊட்டியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சூரியாவின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது இருப்பினும் சூர்யா மீண்டும் ஊட்டி வந்து படபிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், ஊட்டியில் 45 நாட்கள் படப்பிடிப்புகள் நடக்க உள்ளது என்றும் படக்குழுவினர் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

