» சினிமா » செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார் அனிருத் : ஜூனியர் என்டிஆர் புகழாரம்!
வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:13:53 PM (IST)

இந்தியாவின் அடுத்த ஏஆர். ரஹ்மான் ஆக அனிருத் மாறி வருகிறார் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் புகழ்ந்து பேசியுள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.தற்போது, ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். தேவரா செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் அனிருத் பற்றி பேசியதாவது: எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அனிருத்தின் திறமை மிகவும் அற்புதமானது. மெல்லிசை பாடல் வேண்டுமென்றால் வேற லெவலில் தருகிறார். நாயகனை உயர்த்திப்பிடிக்க வேண்டிய பாடல் என்றாலும் நடனாமாட பாடல் வேண்டுமானலும் தருகிறார்.
திறமையில்லாவிட்டால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத்தால் தரமுடிந்திருக்காது. இந்தியாவில் இன்று அதிகமாக அவரது இசையை விரும்புகிறார்கள்.
தென்னிந்தியாவில் இளையராஜா சார், கீரவாணி சார், ரஹ்மான் சார் என பலர் சிறப்பான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அவரிடம் அதிகமான திறமைகள் இருக்கின்றன.
அனிருத் மெதுவாக இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார். அதான் நான் நினைப்பதும். நீங்கள் தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும் ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார். பின்னணி இசைக்காக காத்திருக்கிறேன் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
