» சினிமா » செய்திகள்
நிவின் பாலி- நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:07:13 AM (IST)

‘லவ் ஆக்ஷன் டிராமா' படத்துக்கு பிறகு, நிவின் பாலி - நயன்தாரா ஜோடி மீண்டும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, கமருதீன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை மேவரிக் மூவிஸ் நிறுவனம் மற்றும் நிவின் பாலியின் ஹோம் பாலி ஜே.ஆர். பிக்சர்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இயக்குனர் ஜார்ஜ் பிலிப் ராய் கூறுகையில், ‘‘நிவின் பாலி ஒரு குறும்புமிக்க இளைஞராகவும், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கிறது. விரைவில் படம் ரிலீசுக்கு வருகிறது'', என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

