» சினிமா » செய்திகள்
3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

விஷாலின் 35-வது திரைப்படமான 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்
படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

