» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலி : 16 பேர் காயம்!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:28:51 PM (IST)

பீகாரில் கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கங்கை நதியில் இருந்து புனித நீர் எடுத்த சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் கன்வார் யாத்திரை விமரிசையாக நடந்து வருகிறது. இதனால் சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அந்தவகையில் பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தின் பராபர் பகதி என்ற இடத்தில் உள்ள பாபா சித்தேஸ்வர் நாத் கோவிலில் நேற்று முன்தினம் மாலையில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான கன்வாரியா பக்தர்கள் உள்பட அதிகமானோர் பங்கேற்றனர். இந்த வழிபாடுகள் இரவிலும் தொடர்ந்து நடந்தது. அப்போது இரவு 11.30 மணியளவில் திடீரென கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் ஏராளமான பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். சிலர் கீழேயும் விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் விழுந்து நசுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கன்வாரியா பக்தர்கள் ஆவர்.
மேலும் இந்த நெரிசலில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 10 பேர் முதலுதவி சிகிச்சை முடித்து வீடு திரும்பிய நிலையில், 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் திடீரென ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலுக்கான காரணம் தெரியவில்லை. அதேநேரம் கன்வாரியா பக்தர்களில் 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்த நெரிசல் ஏற்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். எனினும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த தகவல் குறித்து அறிந்ததும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதிர்ச்சி வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், தலா ரூ.4 லட்சம் இழப்பீடும் அறிவித்தார். இதைப்போல ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)
