» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது!

திங்கள் 1, செப்டம்பர் 2025 12:24:32 PM (IST)

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தை விட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவகங்கள், சிறு நிறுவனங்களுக்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி நிலவரத்துக்கு ஏற்ப, சிலிண்டர்களின் விலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51.50 காசுகள் குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலைக் குறிப்பின் காரணமாக புது தில்லியில் ரூ.1580 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1684 ஆகவும், மும்பையில் ரூ.1531 ஆகவும் விலை குறையும். அதுபோல, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory