» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செப்டம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திங்கள் 1, செப்டம்பர் 2025 8:30:06 PM (IST)

செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, செப்டம்பர் மாதத்தில் பல நகரங்களில் வங்கிக் கிளைகள் 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும். இந்த நாட்களில் மக்களுக்கு நேரடி வங்கிச் சேவை கிடைக்காது. ஆனால், ஆன்லைன் வங்கி சேவைகள் எப்போதும் போல செயல்படும். எனவே, செப்டம்பர் மாதம் வங்கி கிளைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் விடுமுறை நாட்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.

சில விடுமுறைகள் நாடு முழுவதும் இருக்கும். சில விடுமுறைகள் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் இருக்கும். இதில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் படி 9 நாட்களும், மற்றவை வார இறுதி நாட்களும், மாநில அரசு விடுமுறை நாட்களும் அடங்கும். எனவே அனைத்து மாநிலங்களிலும் 14 நாட்களும் வங்கிகள் மூடப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

செப்டம்பர் 3 (புதன்கிழமை): கர்மா பூஜை - ஜார்கண்ட்

செப்டம்பர் 4 (வியாழக்கிழமை): முதல் ஓணம் - கேரளா

செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை): ஈத்-இ-மிலாத் / மிலாத்-உன்-நபி - குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளா, டெல்லி, ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுமுறை.

செப்டம்பர் 6 (சனிக்கிழமை): ஈத்-இ-மிலாத் / இந்திரஜாத்ரா - சிக்கிம், சத்தீஸ்கர்

செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை): மிலாதுல் நபி பண்டிகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை - ஜம்மு காஷ்மீர்

செப்டம்பர் 22 (திங்கட்கிழமை): நவராத்திரி ஸ்தாபனா - ராஜஸ்தான்

செப்டம்பர் 23 (செவ்வாய்கிழமை): மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாள் - ஜம்மு காஷ்மீர்

செப்டம்பர் 29 (திங்கட்கிழமை): மகா சப்தமி / துர்கா பூஜை - திரிபுரா, அசாம், மேற்கு வங்காளம்

செப்டம்பர் 30 (செவ்வாய்கிழமை): மகா அஷ்டமி / துர்கா பூஜை - திரிபுரா, ஒடிசா, அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட்

வார இறுதி விடுமுறை நாட்கள்:

செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) - அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

செப்டம்பர் 13 (சனிக்கிழமை) - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை - அனைத்து வங்கிகளும் மூடப்படும்

செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) - அனைத்து வங்கிகளும் மூடப்படும்

செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை) - அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

செப்டம்பர் 27 (சனிக்கிழமை) - நான்காவது சனிக்கிழமை விடுமுறை - அனைத்து வங்கிகளும் மூடப்படும்

செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) - அனைத்து வங்கிகளும் மூடப்படும்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும். சில பண்டிகைகள் ஒரு மாநிலத்தில் மட்டும் கொண்டாடப்படும். ஆனால், மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படாது. உதாரணமாக, "நவராத்திரி ஸ்தாபனா ராஜஸ்தானில் கொண்டாடப்படுகிறது. ஆனால், கோவா, பீகார் போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுவதில்லை. இதுபோல, விடுமுறை நாட்களுக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory