» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, பின்னர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்த வழக்கின் தரப்பினராக எடுத்துக்கொண்டது.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பித்தனர். முன்னதாக டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு மாற்றியமைத்தது. 

அதேபோல், தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், டெல்லி, மேற்கு வங்காளம் , டெல்லி ஆகியவை மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதையடுத்து, எஞ்சிய மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் இன்று நேரில் ஆஜராகினர். அதன்பின்னர் மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்து பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தெரு நாய்கள் வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory