» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதிப்பு இந்து மத தலைவருக்கு ஜாமீன் மறுப்பு!

செவ்வாய் 26, நவம்பர் 2024 4:01:31 PM (IST)

வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட இந்து மத தலைவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 'சமிலிட்டா சனாதனி ஜோட்' என்ற இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது கடந்த மாதம் 30-ந்தேதி வங்கதேசத்தில் உள்ள சத்தோகிரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு நடந்த இந்து மத ஊர்வலத்தின்போது வங்கதேச கொடி அவமதிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சத்தோகிரம் கோர்ட்டில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்து மத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory