» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)
அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார். மேலும், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டார். தென் கொரியாவில் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜின்பிங்க்-டிரம்ப் சந்திப்பு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்துள்ளன.
தொடர்ந்து சீன அதிபரை சந்தித்து பேசிய பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் சிறந்த உறவை கொண்டுள்ளோம். ஒருவரையொருவர் நாங்கள் நன்கு அறிவோம். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். மேலும் நீண்ட காலத்திற்கு நாங்கள் ஒரு அற்புதமான உறவைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீன செல்கிறேன். அதன்பின் சீன அதிபரும் அமெரிக்கா வருகிறார். சீனாவுக்கு கண்ணி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம். விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சீன அதிபர் ஜின்பிங் கூறியதாவது:- "சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது” என்று தெரிவித்தார்.
முன்னதாக பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் வலியுறுத்தினார். அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விஷயங்களை சாதிக்க முடியும். சில வேறுபாடுகள் இருப்பது சாதாரணம்தான். இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் ஏற்படுவது இயல்பானது” என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)




