» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பகல்காம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து சரமாரி வான்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனையடுத்து மே 10-ந்தேதி இரு நாடுகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போரை பேச்சுவார்த்தை மூலம் தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா அதனை முற்றிலும் மறுத்து வருகிறது. இந்தநிலையில் அசர்பைஜான் ராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம். இதனால் பல லட்சம் மக்களின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளார். எனவே டிரம்புக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக அவர் பேசினார். போர் நிறுத்தத்தில் மூன்றாவது தரப்பினர் தலையீட்டை இந்தியா மறுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


new generation indianNov 10, 2025 - 01:39:57 PM | Posted IP 104.2*****