» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பானில் பொருளாதார நெருக்கடி: பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:54:44 AM (IST)

ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். பழமைவாதியான இவர் எம்.பி.யாக இருந்த காலகட்டத்திலேயே சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார். இதன் முதல்கட்டமாக பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக பொது ஊழியர் ஊதிய சட்டத்தை திருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விவாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
ஜப்பானை பொறுத்தவரை எம்.பி.க்களுக்கு ஒரு மாத சம்பளமாக அந்த நாட்டு ரூபாயில் 12.94 லட்சம் யென் (ரூ.7 லட்சத்து 42 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இந்த தொகையில் இருந்து பிரதமருக்கு 11.52 லட்சம் யென் (ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 429) மற்றும் அமைச்சர்களுக்கு 4.89 லட்சம் யென் (ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 497) கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால் செலவு குறைப்பு நடவடிக்கையின்படி கூடுதலாக வழங்கப்படும் தொகையில் இருந்து பிரதமர் 30 சதவீதமும், அமைச்சர்கள் 20 சதவீதமும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 589 மற்றும் ரூ.63 ஆயிரத்து 345 ஆக குறைக்கப்படும் என தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதேசமயம் ஆளுங்கட்சியிலேயே இதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)

