» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் கலவரங்களில் 3 கைதிகள் உயிரிழந்தனர்.
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையேயான மோதல் காரணமாகத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பல்வேறு சிறைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கலவரங்களில் 3 கைதிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் கொழும்புவுக்கு அருகில் அமைந்துள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே திடீரெனக் கடும் மோதல் வெடித்தது. இக்கலவரத்தில் படுகாயமடைந்த கைதிகளில் 2 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10:00 மணியளவில் வன்முறை வெடித்தது. அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை அறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்து வன்முறையில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் ஒரு கைதி கொல்லப்பட்டார்; 10 கைதிகள் காயமடைந்தனர்.
இதேபோன்று, பல்லன்சேனை சிறைச்சாலையில் காலை உணவுக்குப் பிறகு சுமார் 30 கைதிகள் திடீரெனச் சிறையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை நிர்வாகத்திற்கு எதிராகவும், அங்குள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இலங்கை சிறைகளில் போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதே இத்தொடர் வன்முறைகளுக்கும் மோதல்களுக்கும் முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)


