» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!

சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)



வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து கடல் வழியாகப் பக்கத்து நாடான ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களில் 100 அகதிகள் கடலில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குச் சொந்தமான சீயடா நகர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் மொராக்கோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த பகுதியாகும். கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், மொராக்கோவிலிருந்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கடல் மற்றும் நில வழியா ஒரே நேரத்தில் ஸ்பெயினின் சீயடா நகருக்குள் திடீரெனப் புகுந்தனர். இச்சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கடல் வழியாக நீந்தியும், படகுகள் மூலமாகவும் சீயடா நகரின் கரையை அடைய முயன்ற அகதிகளில் பலர் ஆழ்கடலில் மூழ்கினர். மேலும் கரையை அடையும் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்தனர். தற்போது வரை மீட்கப்பட்ட சடலங்களின் அடிப்படையில், உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக ஊடுருவிய அகதிகளை மீட்டு மீண்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் பணியைச் ஸ்பெயின் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 75,000 அகதிகள் ஸ்பெயினிலிருந்து மீண்டும் மொராக்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் சுமார் 5,000 பேர் சீயடா நகரில் தங்கியுள்ள நிலையில், அவர்களையும் பாதுகாப்பாகத் தாயகம் அனுப்பும் நடவடிக்கைகளில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory