» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)

அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் 'எச்-1பி' விசாவின் கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசால் எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் ஆரம்பக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். அமெரிக்கா ஆண்டிற்கு 85,000 எச்-1பி விசாகளை வழங்குகிறது. இதில் 71 சதவீத விசாகளை இந்தியர்களே பெறுகின்றனர். சீனர்கள் 12 சதவீதமும், இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள் 17 சதவீத விசாகளையும் பெறுகின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு எச்-1பி விசா கட்டணம் ₹1.9 லட்சத்திலிருந்து ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொருள் பொறியாளர்கள் பணியில் சேருவதைத் தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்கள் இந்தக் கட்டண உயர்வுக்குத் தடை விதித்தன. தற்பொழுது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், எச்-1பி விசாவுக்கு ₹1.9 லட்சம் முதல் ₹4.7 லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பிடம் புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், எச்-1பி விசா கட்டணத்தை ₹98 லட்சமாக அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை நடப்பாண்டு இறுதிக்குள் அமல்படுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கினியாவில் கனமழையால் குப்பை மலை சரிந்து 30 பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:45:05 PM (IST)

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:41:34 PM (IST)

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:46:27 AM (IST)

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 8:47:12 AM (IST)

உச்ச நீதிமன்றம் அனுமதி: 9 மாதங்களுக்கு பின் இம்ரான் கானை சிறையில் சந்தித்த குடும்பத்தினர்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:12:37 PM (IST)


