» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூர கொலை : எதிர்வீட்டு பெண் வெறிச்செயல்!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:52:02 PM (IST)



நெல்லையில் முன் விரோதத்தால் 3 வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இன்று காலை தனது 3 வயது பையன் சஞ்சய் யுடன் தெருவில் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். காலை 9.15 மணிக்கு சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்ல தேடிய போது காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் உள்ள வீடு மற்றும் தண்ணீர் தொட்டிகளில் தேடி உள்ளனர். 

மேலும், ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். எதிர் வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தங்கம் தன் குழந்தையை கடத்தி வைத்து இருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தங்கம் வீட்டிற்குள் சென்று சிறுவனை தேடியபோது வீட்டிலிருந்த வாஷிங் மிஷினில்  சாக்கு பையில் போட்டு கட்டி வைத்திருந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். 

இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கத்தை பிடித்த போது அவர் போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை லாபகமாக பிடித்து ராதாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், "தனது மகன் விபத்தில் இறந்ததற்கு எதிர்வீட்டு குடும்பம் தான்  செய்வினை செய்ததாக நினைத்து, அதற்குப் பழி வாங்கும் விதமாகவே 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளதாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory