» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் இறந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!
சனி 26, அக்டோபர் 2024 5:10:40 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பையா குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் அன்னாரின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் விக்கிரமசிங்கபுரம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த திரு சுப்பையா காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் இரவு வீடு திரும்பும் போது 21.10.2024 அன்று எதிர்பாராவிதமாக சாலை விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முதல் உதவிக்காக அம்பாசமுத்திரம் தீர்த்தபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்களால்; தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தார்கள் தானாக முன்வந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து அன்னாரின் உடல் உறுப்புகளான கல்லீரல் சிறுநீரகம் தோல் மற்றும் கருவிழிகள் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சுப்பையா குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் இரங்கல்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சத்திற்கான நிதி உதவியையும் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி வி.கே.புரம் கொட்டாரம் பகுதியில் உள்ள அண்ணாரது இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தி நிதி உதவிக்கான காசோலையினை வழங்கி அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

