» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை: போலீசார் திணறல்!!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:29:01 AM (IST)

நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 கொலை நடந்துள்ள நிலையில், குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாதம் 2 அல்லது 3 கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் கூட, கொலை சம்பவங்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.

சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பாக அவரை காரை வைத்து மோதி கொலை செய்ய முயன்றதாகவும், அப்போதே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் பிரபுதாஸ் தற்போது உயிருடன் இருந்து இருப்பார் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் கடைசியாக கே.டி.சி. நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் "அதிகமான கொலைகள் இருதரப்பினர் இடையே ஏற்படும் திடீர் மோதல்களால் நிகழ்ந்துள்ளன. முன்விரோதம், பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கவில்லை. நடக்க இருந்த கொலைகள் பல தடுக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory