» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)



திருநெல்வேலியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டுவிண்ணப்பித்த பயனாளிகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.09.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் அளித்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.6000/- மதிப்பிலான இலவச பித்தனை தேய்ப்பு பெட்டி ஒரு பயனாளிக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.6690/- மதிப்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.13,500/- மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கும், ரூ.13,500/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory